கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவு பொருட்களிள் விலை உயர்வால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அதன்படி,  பல பகுதிகளில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபாய் வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவு பொருட்களிள் விலை உயர்வால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அண்மையில் இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசி, உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், பாம் எண்ணெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால், புத்தகங்கள், பேனாக்கள், காலணிகள் , டயர்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT